விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வாக்குசாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்,  புரட்சியாளர் அம்பேத்கார், தந்தை பெரியார், மாமேதை மார்க்ஸ் ஆகியோரை நாம் கொள்கை ஆசான்களாக உள்வாங்கி இருக்கிறோம். அவர்கள் மூவரின் கருத்தும், இலக்கும் ஒன்றுதான். மக்களிடையே எந்த அடையாளத்தின் பெயராலும்  பாகுபாடுகள் இருக்கக் கூடாது,  பாகுபாடுகள் இருக்கக் கூடாது என்றால் ? சாதி ஒழிக்கப்பட வேண்டும்.  சாதி ஒழிக்கப்பட வேண்டுமானால் ? அரசியல், அதிகாரம் தேவை.

ஆட்சி,  அதிகாரம் தேவை. வெறுமனே போராட்டங்களால் மட்டும் ஒழித்து விட முடியாது. அதிகாரத்தில் இருப்பவர்களை….  இயக்கக்கூடிய சக்தி அல்லது அதிகாரத்தில் போய் அமரக்கூடிய சக்தி…  ஒரு அரசியல் இயக்கத்திற்கு தேவை. அந்த இலக்கோடு பயணப்பட்டு இருக்கிற இந்த இயக்கம் தேர்தலில் ஒரு சிலரை பதவியிலே அமர்த்துவதற்காக இல்லை….  புரட்சியாளர் அம்பேத்கரின் கனவை நினைவாக்குவதற்காக இருக்கிறது.

அதற்கு தொடக்கத்தில் அதிகார பகிர்வு… அதுதான் கூட்டணியில் இணைகிறோம். அதனால் தான் சில தொகுதிகளில் வெற்றி பெறுகிறோம். போன தேர்தலில் எனக்கு 6 சீட் வேண்டாம். ஏனென்றால் எனக்கு  கலைஞர் இருந்தப்ப 10 தொகுதி தந்தார். நீங்க போய் 6 தொகுதி தாறீங்க. நாங்க இருக்க முடியாது அப்படின்னு நான் கோச்சிட்டு வெளிய வந்து இருந்தா…  நான் 100 தொகுதிகளில் கூட வேட்பாளராக உங்களை போட்டிருக்க முடியும்.

ஒரு ஆளு கூட உள்ள போயிருக்க முடியாது. ஒரு கூட்டணியிலேயே இணைந்து ஆறு தொகுதிகளில் போட்டியிட்டு,  நான்கு தொகுதியில் வெற்றி பெற்று,  இன்றைக்கு சட்டமன்றம் கூடும்போதெல்லாம் சிறுத்தைகளின் குரல் சட்டமன்றத்திலே ஒலிக்கிறது. இலட்சோப லட்சோப லட்சம் கணக்கான மக்களின் குரலாக அது ஒலிக்கிறது என தெரிவித்தார்.