செய்தியாளர்களிடம் பேசிய SV.சேகர், அண்ணாமலையால் தான் இந்த கூட்டணி முறிந்தது. அண்ணாமலையை கூப்பிட்டு திட்டிருப்பாங்க. நம்மகிட்ட சொல்லுவாரா அவரு. அவர் இந்த அழகுல கமலஹாசன்ணுக்கு அட்வைஸ் பன்றாரு.  இவரே  தான் எப்படி நடந்துக்கணும் என்று தெரியலை. இவர் எதுக்கு கமல்ஹாசனுக்கு அட்வைஸ் பண்ணனும். விரைவில் தமிழ்நாட்டில் அண்ணாமலை மாற்றப்படுவார்.

அரசியல் முதிர்ச்சியோ, அரசியல் அனுபவமோ இல்லாத ஒரு காரணத்தை வைத்து அவர் அப்படி பேசியிருக்கிறார். அப்படிப்பட்ட ஒருவரை தமிழ்நாடு தலைமையில் அமர்த்தியது தான் தவறு அண்ணாமலை தமிழ்நாட்டுல பிஜேபி தலைவரா இருக்குறதுக்கு பிஜேபி பூஜ்ஜியமாகத்தான் இருக்கும். ஆளுகின்ற அரசு மாநிலத்துல செய்யக்கூடிய நன்மைகள்.  அதுதான் ஓட்டு வங்கியாக மாறும். இன்னைக்கு மகளிர்க்கு  1000 ரூபாய்  கொடுக்கிறார்கள் என்றால் ? அது ஒரு பெரிய ஒன்றரை  கோடி ஓட்டு வங்கி.

இலவச பஸ் பயணம் என்றால் அது ஒரு கோடி ஓட்டு வங்கி.  அந்த மாதிரி தான் நடக்கும். அதனால அதை தாண்டி செய்யணும்….  செய்து மக்கள்கிட்ட எடுத்துட்டு போகணும். 2024இல் டெல்லியில் மோடி மீண்டும் பிரதமராக வருவார். தமிழ்நாடு கொஞ்சம் கொஞ்சமா தான் பாக்கணும் அவ்வளவுதான். லியோ ஆடியோ  நிறுத்தப்பட்டு இருக்கா ? நிறுத்திட்டாங்களா ? நிறைய வித்தியாசம் இருக்கு. அவங்களே நான்தான் நிறுத்தி இருக்கேன் அப்படி சொல்றாங்க. அப்புறம் எப்படி நிறுத்தப்பட்டது சொல்ல முடியும் ?

எல்லா விஷயத்துலயும் நம்ம கருத்து சொல்லணும் என்று கருத்து கந்தசாமியா நிக்க முடியாது. ஏன்னா.. ஒரே ஒரு விஷயம். விஜய் அரசியலுக்கு வருவதற்கு தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார் என்று தெரியுது. ஏனென்றால் அவருடைய அனைத்து ரசிகர் மன்றங்களையும் ஒருங்கிணைத்து,  ஒரு கட்சிக்கு என்ன தேவையோ அந்த கட்டமைப்பை அவர் கொண்டு வருகிறார். அதனால அவர் எப்ப வருவார் எப்போ போவார் எனக்கு தெரியாது என தெரிவித்தார்.