ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்..

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 தரவரிசையில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். கடந்த ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி சூர்யா முதலிடத்திற்கு முன்னேறினார். புதன்கிழமை (ஏப்ரல் 26) வெளியிடப்பட்ட சமீபத்திய தரவரிசையில், சூர்யா 906 ரேட்டிங் புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். ரிஸ்வான் (811 புள்ளிகள்) 2ம் இடத்திலும், பாபர் அசாம் (756 புள்ளிகள்) 3ம் இடத்திலும் உள்ளனர்.

பாபர் அசாம் சதம் அடித்தாலும் சூர்யகுமாரை அசைக்க முடியவில்லை :

சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் (5 போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது டி20) சூப்பர் சதம் (58 பந்துகளில் 101 ரன்) விளாசிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், சமீபத்தில் வெளியான டி20 தரவரிசையில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. சதத்திற்குப் பிறகும் பாபரின் தரவரிசையில் எந்த மாற்றமும் இல்லை. அவர் இன்னும் 3வது இடத்தில் இருக்கிறார். முகமது ரிஸ்வான் ஒரே தொடரில் 2 அரைசதங்கள் அடித்தாலும், அவரது தரவரிசை மாறவில்லை. அவர் தொடர்ந்து 2வது இடத்தில் உள்ளார்.