IBPS ப்ரொபஷனல் அதிகாரி மற்றும் மேலாண்மை பயிற்சிக்கான முதல் நிலை மதிப்பெண் அட்டைகள் வெளியிடப்பட்டுள்ளது. சமீபத்தில் முடிவுகளை வெளியிட்ட நிலையில் தற்போது மதிப்பெண் அட்டைகள் வெளியிடப்பட்டுள்ளது. இதனை விண்ணப்பத்தாளர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதி விவரங்களுடன் நவம்பர் 5ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மொத்தம் 3 3049 பணியிடங்களுக்கான முதல் நிலை தேர்வு செப்டம்பர் 23, 30 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.