செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, அமைச்சரின் வீட்டில் ED அதிகாரிகள் சோதனை செய்து, அவரை விசாரித்து, கைது செய்தபோது முதலமைச்சர்  தனியா உக்கார்ந்து ஒரு நீண்ட விளக்கம். உங்க டிவிங்க எல்லாம் போட்டீங்க. பொதுமக்கள் பிரச்சனைக்காக ஒரு சிஎம் உட்கார்ந்து பேசுவதை தான் நம்ம இதுவரைக்கும் பார்த்திருக்கிறோம். ஒரு தனிப்பட்ட மனிதருக்காக…  ஒரு முதலமைச்சர் உட்கார்ந்து பேசுறது எனக்கு தெரிஞ்சு சுதந்திரம் வாங்கினதுக்கு பிறகு தமிழ்நாட்டுல இப்பதான் நடந்து இருக்கு.

அது அவ்வளவு முக்கியமான விஷயம் இல்லையே…  தவறு இருந்தால் தண்டிக்கப் போறாங்க. இல்லன்னா….  அவர் பாட்டுக்கு வெளியில் வரப்போறாரு.கோர்ட் இருக்கு அதுல போய் முறையீட்டு வர வேண்டியதுதானே,  அதை செய்யலையே. மக்கள் பிரச்சனையை பின்னுக்கு தள்ளிட்டாங்க. அவுங்க பிரச்சினையை பார்க்கிறதுல தான் அவங்க நேரத்தை செலவழிக்கிறாங்க.

இது எந்த வகையில் நியாயம் ? தவறு இல்லையா இது.  இந்த மாதிரி விஷயங்கள்ல நான் சும்மா இருக்க முடியாது. ஏன்னென்றால்  நான் அம்மா கூட இருந்திருக்கேன். அதனால நான் கேட்க வேண்டிய நேரத்துல…  பொதுமக்களுக்காக நான் கேட்டு தான்  தீருவேன். அமலாக்கத்துறை, வருமானவரித்துறையை ஆளுமை அரசு எதிர்கட்சிகளை பழிவாங்க பயன்படுத்துகின்றது என என்க கிட்ட கூட தான் வந்துச்சு.

உங்களுக்கு ஒரு சப்போர்ட் தேவை என்கிறதுக்காக நீங்க அப்படி வேணா சொல்லலாம். உங்க மேல தவறு இல்லனா…. நீங்க போங்க அட்டென்ட் பண்ணுங்க,  வாங்க. அதை விட்டுட்டு உடனே மத்திய அரசின் மீது குறை சொல்றீங்களே…  அன்னைக்கு 1996 அம்மா மேல…  எங்க மேல கேஸ் போட்டதை இப்படி  எடுத்துக்கலாமா ?  எதுவா இருந்தாலும் பேச்சு ஒரே மாதிரி இருக்கணும். அவங்களுக்கு வந்தா ஒன்னு…. எப்படி அது? மாமியார் உடைச்சா மண் குடம், மருமகள் உடைச்சா அது பொன் குடம் என்கின்ற மாதிரி இருக்கு. இது தவறு… மக்கள் பிரச்சனை பார்க்கணும் அரசாங்கம்…  வந்து மூணு வருஷம் ஆயிடுச்சு. இதுவரைக்கும் எதையும் பாக்கல. இதை நான்  வெளிப்படையாகவே சொல்கிறேன் என தெரிவித்தார்.