
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நான் மத்தவங்கள விட அதிகமாக உழைத்தவன்…. எல்லாருக்கும் முன்னாடி 1996 DMK – TMC கூட்டணி இருக்கும்போது…. இன்னைக்கு நான் சொல்லிக்கிறேன்…. இன்னைக்கு வந்துரும்ல செய்தி…. அதனால சொல்றேன்…. நான் மட்டும் இருந்தா எனக்கு கலைஞர் 25 சீட்டு கேட்டு இருந்தா கொடுத்திருப்பார். அப்போது வாங்கி இருந்தால், என் கட்சி வந்து ஆட்சியில் இன்னைக்கு உட்கார்ந்து இருக்கும்.
அந்த மாதிரி எண்ணமே இல்லை. அன்னைக்கு ADMKவை எதிர்க்கணும்னு நினைச்சேன்…. பிரச்சாரம் பண்ணேன்…. 40 நாட்கள் பண்ணுனேன்… 15 வது நாள் தொண்டை கட்டிக்கிச்சு.. பீட்டர் அல்போன்ஸ் வந்தாரு, காங்கிரஸ் முன்னணி தலைவர்கள் வந்தாங்க…. என்னை வந்து ஐயோ சீக்கிரம் குணமாகனும் என்று டாக்டர் எல்லாம் கூட்டிட்டு வந்தாங்க…. அப்பயும் தொடர்ந்து பணி பண்ணேன்…. மூணு மணிக்கு படுப்பேன்… அஞ்சு மணிக்கு எழுந்து பிரச்சாரம் போவேன்…
1996இல் சுகவனம் ஜெயலலிதாவுக்கு எதிராக வெற்றி பெறுவார் என்று சொன்னேன். கலைஞர் கிட்ட போய் சொன்னேன்…. இதெல்லாம் உங்களுக்கு யாருக்கும் தெரியாதே, உழைப்பு…. என்னை மாதிரி உழைப்பு யாருக்கும் கிடையாது. சேலஞ்ச் பண்றேன்… என்னை மாதிரி உழைக்க சொல்லு…. என்னுடைய உழைப்பு எனக்கு தெரியும். ப்ரூப் பண்ற நிலைமையில் நான் இல்ல. மக்கள் வந்து புரிந்து கொள்வார்கள்.சரத்குமார் உண்மையான தலைவர்ன்னு தெரியும் என பேசினார்.