நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே….  மணிப்பூர் பற்றி நாட்டின் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் இரண்டு மணி நேரம் மிக அருமையாக அரசியல் கலப்பின்றி தெளிவாக சொன்னார். நாட்டின் எண்ணம் என்ன என்பதை வெளிப்படுத்தினார். அதில் நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முயற்சி செய்தார். இந்த முழு அவையின் நம்பிக்கை மணிப்பூருக்கு ஒரு செய்தியாக அனுப்ப அவர் முயற்சி செய்தார்.

ஒரு நேர்மையான உணர்வோடு அவர் இத்தகைய பணிகளை செய்தார். ஆனால் அரசியலைத் தவிர வேறு எதுவும் செய்ய தெரியாத இவர்கள்..  என்ன விளையாட்டு விளையாடுகிறார்கள் என்று பாருங்கள் ? மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே… நேற்று விபரமாக அமித்ஷா அவர்கள் கூறியது போல் மணிப்பூர் பற்றி நீதிமன்றத்தில் இருந்து தீர்ப்பு வந்துள்ளது. அதை பற்றி சார்பாகவும் – எதிர்ப்பாகவும் பல்வேறு கருத்துக்கள் வந்தன. அங்கு வன்முறை துவங்கி விட்டது.

அது பல குடும்பங்களுக்கு கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் தங்கள் சொந்தங்களை இழந்துள்ளார்கள். பெண்கள் மீது மிக கம்பீரமான புகார்கள் வந்தன. குற்றம் செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குவதற்காக மத்திய அரசு – மாநில அரசும் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் நம்பிக்கை அளிக்க விரும்புகிறேன்.

இங்கு நடக்கின்ற முயற்சிகள் எல்லாம் வருங்காலத்தில் அமைதியை ஏற்படுத்துவதற்கு வழிவகை செய்யும். மணிப்பூர் புது நம்பிக்கையுடன் முன்னேறும். நான் மணிப்பூரில் உள்ள மக்களுக்கு ஒரு விஷயம் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்…  அங்கு இருக்கின்ற தாய்மார்களும் –  பெண்களும் – மகன்கள் இடத்தில் சொல்ல விரும்புகிறேன். நாடு உங்களோடு இருக்கிறது. இந்த அவை உங்களோடு இருக்கின்றது. இங்கே இருப்பவர்களாக இருக்கட்டும்,  எதிரணியில் இருப்பவர்களாக இருக்கட்டும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த பிரச்சனைக்கு தீர்வு என்ன என்பதை காண்போம் ?  மணிப்பூரில் மீண்டும் அமைதியை ஏற்படுத்துவோம். நான் மணிப்பூரில் உள்ள மக்களுக்கு நம்பிக்கை அளிக்க விரும்புகிறேன். மணிப்பூர் மீண்டும் வளர்ச்சி பாதையில் வேகமாக முன்னேறும். அதற்கான முயற்சிகளில் நாங்கள் எந்த குறையும் வைக்க மாட்டோம் என  தெரிவித்தார்.