ஈரான் நாட்டின் அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய உச்சத்தலைவர் ஆயத்துல்லா அலி கொமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார். “எபிக் பியூரி” (Epic Fury) எனப் பெயரிடப்பட்ட இந்த அதிரடித் திட்டத்தின் மூலம், டெஹ்ரானில் உள்ள அவரது அலுவலகத்தின் மீதே குண்டுகள் வீசப்பட்டன.
இந்தத் துயரச் செய்தியை ஈரான் அரசுத் தொலைக்காட்சியில் அறிவித்த பெண் செய்தி வாசிப்பாளர் மரியம் அசார்செஹ்ர், நேரடி ஒளிபரப்பிலேயே கண்ணீர் விட்டு கதறி அழுதது காண்போரை நெகிழ வைத்தது.
Iran public state broadcaster Pree TV anchor breaks down announcing the demise of Iran’s top leader Khamenei by US – Israel strikes. pic.twitter.com/j5RXeiU5Ye
— Iran Observer (@24_70xu) March 1, 2026
“எங்கள் தலைவரை கொன்றவர்கள் இதற்கான விலையை கொடுத்தே தீருவார்கள், பழிவாங்கல் விரைவில் வரும்” என அவர் ஆவேசமாக எச்சரிக்கை விடுத்தார். கொமேனியுடன் சேர்ந்து அவரது மகள், மருமகன் மற்றும் பேரன் ஆகியோரும் இந்தத் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “உலகின் மிக மோசமான தீய சக்தி ஒழிக்கப்பட்டுவிட்டது” எனக் கருத்து தெரிவித்துள்ள நிலையில், ஈரான் முழுவதும் 40 நாட்கள் துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேகம் சூழ்ந்துள்ளதால் உலக நாடுகள் பீதியில் உள்ளன.
