அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, 1984இல் தேர்தல் பிரசாரத்தில் எதிர்க்கட்சியான கலைஞர் கருணாநிதி எம்ஜிஆர் இப்போது  உயிரோடு இல்ல, அவர் பொம்மையா வச்சிருக்காங்க. இங்க இருக்கிறவுங்க சும்மா ஆட்டி படைக்கிறாங்க.. அமைச்சர்கள் சும்மா ஏமாத்துறாங்க. அப்ப எல்லாம் டிவி இல்ல..

உடனே அவர் சொன்னாரு… என் நண்பர் வந்த உடனே….  அப்படியே முதலமைச்சர் பதவியை அவரிடம் தூக்கி கொடுத்துடுறேன் என சொல்லி வாக்கு கேட்டார். எவனாச்சும் சொல்லுவானா… ஒரு பொது தேர்தலில்  தன்னை எதிர்த்து நிற்கின்ற தலைவரை…..  அவருக்கு ஓட்டு போடாதீங்க,  எனக்கு ஓட்டு போடுங்க. நான் வந்த உடனே அவருக்கு கொடுத்துடறேன்…

அந்த மாதிரி கேடுகெட்ட கட்சி தான் திமுக. கேடுகெட்ட குடும்பம் தான் நம்முடைய கலைஞர் குடும்பம். ஆனால் மக்கள் நம்பவில்லை.  தலைவர் எப்படி முதலமைச்சரா போனாரோ, அதே மாதிரி முதலமைச்சராகவே வந்தாரு. வெற்றி பெற வைத்த மக்கள் நம்முடைய தமிழக மக்கள்….  பாசத்திற்கு அடிமையான மக்கள் தமிழக மக்கள்..

புரட்சித்தலைவர் அள்ளி அள்ளி கொடுத்த வள்ளல் பெருமான். திராவிட முன்னேற்றக் கழகத்தை வளர்த்தெடுத்தவர் புரட்சி தலைவர்…  அந்த இயக்கத்தை… நம்முடைய பேரறிஞர் அண்ணா உருவாக்குகிறார்.  தந்தை பெரியாரிடம் கருத்து வேறுபாடினால் வருகிறார். கட்சியை உருவாக்குகிறார். ராபின்சன் பூங்காவில் கூட்டம் போட்டு கட்சியை அமைக்கிறார்.

அதில் கருணாநிதியின் உடைய பங்கு என்ன ? 28 வது இடம். ஐம்பெரும் தலைகளில் கலைஞர் இல்லை.அந்த இயக்கத்தை 52இல் புரட்சித்தலைவர் கட்சியில் சேருகிறார்… திமுகவில் அண்ணாவின் பேச்சாற்றலை தெரிந்து… அவருடைய அன்பிற்கும் பாசத்திற்கும் கட்டுப்பட்டு சேர்கிறார். அதுவரை திராவிட முன்னேற்றக் கழகம் 1953 வரை எந்த ஒரு சாதனையும் செய்யல. எங்கும் அந்த கட்சியை  திராவிட கழகத்தினுடைய மறு பிரிவாக தான் பார்த்தார்கள்.

புரட்சித்தலைவர் திமுகவில் சேர்ந்த பிறகு தான்,  நடித்த ஒவ்வொரு படத்திலும்   தலைவன் தன்னுடைய தலைவன் ( அண்ணா ) புகழை பாடினார். ஒரு நடிகன் எம்ஜிஆர் தான் நடித்த அதனை படங்களிலும், முரசொலி  பத்திரிக்கையை காண்பிப்பார்.  கதிரவன் பெயர் வைப்பாரு… உதயசூரியன் என்ற பெயரில் தன்னுடைய கேரக்டருக்கு உருவாக்குவார்.

அண்ணாவின் உடைய கருத்தை பேசுவார். இப்படி பேசி பேசி அன்றைக்கு பொதுக்கூட்டங்கள், நாடகங்கள், சினிமாக்கள் இது மூன்று தான். பொதுக் கூட்டத்தில் மூன்று மணி நேரம் நாவலர் நெடுஞ்செழியன் பேசுவார்.அதனால் நடமாடும் பல்கலைக்கழகம் அவருக்கு பெயர் அண்ணா வச்சது. இது தான்  அன்னைக்கு கட்சியை வளர்க்கக்கூடிய தளம். இன்றைக்கு பல தளங்கள் வந்துவிட்டது. இன்றைக்கு நவீன உலகத்தில் எத்தனையோ தளங்கள் வந்துடுச்சி.. இன்னைக்கு பேசுனா ஒரு நொடியில் ரீச் ஆய்டும் என தெரிவித்தார்.