தெலுங்கானா மாநிலம் ஜனகாமுக்கு அருகே உள்ள ஜங்கான் பகுதியை சேர்ந்த 18 வயது இளம்பெண், அதே பகுதியைச் சேர்ந்த முகமது ஒவைசி(23) காதலித்து வந்தார். ஆனால், கொடூரமாக தனது காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்க திட்டமிட்ட முகமது, கடந்த மாதம் “தனியாக பேச வேண்டும்” என்று அழைத்து வரவழைத்தார்.
காதலனின் வார்த்தையை நம்பி சென்ற இளம்பெண், முன்னதாகவே காருடன் தயாராக இருந்த முகமது ஒவைசி மற்றும் அவரது நண்பர்கள் பவன்குமார், சிவக்குமார், அப்துல் கியூம், பூஜா சமந்த் ரெட்டி, சாய் சரண் ரெட்டி, சாய்ராம், நுகலா ரவி, ஜெட்டி சஞ்சய் ஆகியோரால் காரில் ஏற்றப்பட்டு, லாட்ஜ்க்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு இளம்பெண்ணை மிரட்டி ஒருவர் பின் ஒருவராக அடுத்தடுத்து பாலியல் பலாத்காரம் செய்தனர். பின்னர், யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டி அனுப்பிவைத்தனர்.
சம்பவத்தை வெளியில் தெரிவிக்காமல் இருந்த இளம்பெண், சில நாட்கள் கழித்து மீண்டும் அதே குழுவில் இருந்த வாலிபர் ஒருவரால் கோவா அழைத்து செல்லப்பட்டார். அங்கும் அறை எடுத்து கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பின், இளம்பெண் சொந்த ஊருக்கே திருப்பி விடப்பட்டார். மன உளைச்சலில் தவித்த அவர், நடந்த கொடுமையை தனது சகோதரியிடம் வெளிப்படுத்தியதும், உடனே போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இளம்பெண் மீது கூட்டு பாலியல் பலாத்காரம் நடந்தது உறுதி செய்யப்பட்டதால், சம்பவத்தில் ஈடுபட்ட 10 வாலிபர்களும் கைது செய்யப்பட்டு ஜெயிலுக்கு அனுப்பப்பட்டனர். இந்தக் கொடூர சம்பவம் தெலுங்கானா மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
