தன் கண் முன்னாலேயே மனைவி வேறொரு நபருடன் காரில் ஊர் சுற்றியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கணவனை, அந்த மனைவியும் கள்ளக்காதலனும் சேர்ந்து மிரட்டித் துரத்திய விசித்திரச் சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

வீட்டை விட்டு வெளியே சென்ற மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவர், அவரைப் பின் தொடர்ந்து சென்றுள்ளார். அப்போது, ஒரு மர்ம நபருடன் தனது மனைவி காரில் நெருக்கமாக அமர்ந்து பேசிச் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போனார்.

ஆத்திரமடைந்த கணவர் நடுரோட்டிலேயே சத்தம் போட, காரை ஓரம் கட்டிய அந்த நபர், “உன் மனைவி எனக்கு அண்ணி முறைதான், அவளைப் பார்க்க வந்தேன்” எனச் சமாளித்துள்ளார்.

கணவர் விடாமல் கேள்வி கேட்கவே, அந்த நபர் “உனக்கு எப்போதுமே சந்தேகப் புத்திதான்” என எகிறியுள்ளார். இதற்கிடையில், தன் கணவனுக்கு ஆதரவாகப் பேசாத அந்தப் பெண், கள்ளக்காதலனுக்கு ஆதரவாகப் பேசித் தன் கணவனையே மிரட்டியுள்ளார்.

“நான்தான் இவரை வரச் சொன்னேன், சத்தம் போடாமல் இங்கிருந்து கிளம்பு” என மனைவி ஆவேசப்பட, கடைசியில் வேறு வழியின்றி அந்த கணவர் அங்கிருந்து கண்ணீருடன் கிளம்பிச் சென்றார். இந்தக் காட்சிகள் அனைத்தும் வீடியோவாக வெளியாகி இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.