குளிர் காலத்தில் தண்ணீரைச் சூடுபடுத்த நாம் அனைவரும் பயன்படுத்தும் ‘இம்மர்ஷன் ஹீட்டர்’ (Immersion Heater) எனப்படும் வாட்டர் ஹீட்டர் ராடுகள், தொழிற்சாலையில் எப்படித் தயாரிக்கப்படுகின்றன என்பது குறித்த ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நாம் சாதாரணமாகப் பயன்படுத்தும் இந்த ஹீட்டர் ராடுகளுக்குப் பின்னால் இவ்வளவு பெரிய தொழில்நுட்பம் இருக்கிறதா? என்று வியக்கும் வகையில் இந்த வீடியோ அமைந்துள்ளது.
View this post on Instagram
முதலில் ஸ்டீல் அல்லது உலோகக் கலவையால் ஆன நீண்ட மெல்லிய குழாய்கள் தயார் செய்யப்படுகின்றன. பின்னர் அவை இயந்திரங்கள் மூலம் ஹீட்டர் வடிவத்திற்கு வளைக்கப்படுகின்றன.
இதன் முக்கிய பகுதியாக, அந்தக் குழாய்களுக்குள் வெப்பத்தை உருவாக்கக்கூடிய மின்சாரக் கம்பிகள் (Heating Elements) மிகவும் கவனமாகப் பொருத்தப்படுகின்றன.
அதன் பிறகு, அவை நன்கு சுத்தம் செய்யப்பட்டு, பளபளப்பாக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. ஒரு சாதாரண ஹீட்டர் ராடு உருவாவதற்குப் பின்னால் இருக்கும் தொழிலாளர்களின் கடின உழைப்பை இந்த வீடியோ வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
