செய்தியாளர்களிடம் பேசிய தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நீட் தேர்வை ஒழிக்க முழு பொறுப்பை நான் உணர்கின்றேன.  எல்லோருமே உணர வேண்டும்.  நான் பிரச்சாரத்துக்கு போகும்போது பேசினேன். ஆமாம் நீட் தேர்வு கண்டிப்பாக ரத்து செய்யப்பட வேண்டும் என்று உறுதி கொடுத்தேன்.  ஆனால் அதற்கான எல்லா முயற்சியும் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். அதிமுக மாதிரி பொய் சொல்லிக்கிட்டு,  மக்களை ஏமாற்றுவது கிடையாது. நான் உணர்வுபூர்வமாக சொல்கின்றேன்.

யார் என்ன  கிண்டல் பண்ணட்டும், யார் என்ன விமர்சனம்செய்யட்டும், நான் கண்டிப்பாக மாணவர்கள் பக்கம் துணை நிற்பேன். முழு பொறுப்பையும் நான் ஏற்றுக் கொள்கின்றேன். மக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் சொல்கின்றேன். இது என்னுடைய சட்டமன்ற உரையில்….  முதல் உரையில் நான் சொன்னேன். இது மக்கள் போராட்டமாக மாற வேண்டும். நான் ஒரு உதயநிதி பேசி பயனில்லை…  முதலமைச்சரவர் அவர்களால் என்னென்னலாம் செய்ய முடியுமோ, அதை  எல்லாம் செய்து கொண்டிருக்கிறார்.

சட்டமன்றத்தில் இரண்டு வாட்டி தீர்மானம் நிறைவேற்றி,  அதை அனுப்பி ஆளுநர் கிடப்பில் போட்டு,  அதை கேட்பதற்கு இரண்டு அமைச்சர்களை அனுப்பி,  ஜனாதிபதிக்கு அனுப்புங்கள் என்று சொல்லி..  இவ்வளவு பிரஷர் கொடுத்து தான் இதெல்லாம் பண்ணிக் கொண்டிருக்கிறோம். ஓய்வு பெற்ற நீதியரசர் ஏகே ராஜன் தலைமையில் கமிட்டி அமைச்சு…  ஒவ்வொரு பிரிவினரையும் அழைத்து, இந்த நீட்டினால் எவ்வளவு பிரச்சனை இருக்கு ? நம்ம வேற ஒரு சவாலை சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

ஏற்கனவே தமிழ்நாட்டில்  நிறைய மருத்துவர்கள்…  உலகப் புகழ் பெற்ற மருத்துவர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் இருந்து வந்திருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் நீட்டை படிச்சா வந்தாங்க. என்ன வேணா… யாருவேனாலும்  பேசட்டும்.  திமுகவுடைய இளைஞர் அணி – மாணவர் அணி – மருத்துவர் அணி நாளை மறுநாள்  உண்ணாவிரத  போராட்டத்தை நடத்தி, நாங்கள் மக்களை சந்திக்கிறோம். எங்களின்  வருத்தத்தை தெரிவிக்கின்றோம். இதில்,  தயவு செய்து மக்கள் –  மாணவர்கள் – பெற்றோர்கள் – ஆசிரியர்கள் – பெரும்பாலானோர் கலந்து கொண்டு அவர்களுடைய ஆதரவையும் தெரிவிக்க கேட்டுகொள்கின்றேன் என தெரிவித்தார்.