தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ள நிலையில் தற்போது இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்தத் திட்டத்தின் அரசாணை வெளியிட்ட போது தகுதி உள்ளவர்களை தேர்வு செய்வதற்கான சில விதிமுறைகள் விதிக்கப்பட்டது. அதாவது முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய ஓய்வூதியம் போன்றவற்றைகளை பெரும் நபர்களை சேர்ந்த குடும்பத்தில் உள்ளவர்கள் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதி இல்லாதவர்கள் என அறிவிக்கப்பட்டது.

அரசின் இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக ஆலோசித்த அரசு தற்போது உரிமை தொகை திட்டத்திற்கான புதிய தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம், இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் போன்றவற்றில் ஓய்வூதியம் பெரும் குடும்ப நபர்களைக் கொண்ட பெண்களும் மகளிர் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அனைவரும் பயன் பெரும் விதமாக ஆகஸ்ட் 18 முதல் 20 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் இதற்கான சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.