செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, என்னை பொறுத்தவரை தனிப்பட்ட முறையில் ”பாரதம்” என்கிற வார்த்தை இன்னும் நம்முடைய கலாச்சாரத்தை மிக அழகாக, ஆழமாக, நுட்பமாக, தெளிவாக காட்டுகிறது.அப்படிங்குறது என்னுடைய தனிப்பட்ட கருத்து.கட்சியாக அதிகாரபூர்வமாக ஒரு கருத்து வந்தது போது  நான் பேசுறேன்.

எத்தனை திட்டத்திற்கு ”பாரதம்” என்கிற பெயரை வைத்து  இருக்கின்றோம். நாம் ஆட்சிக்கு வந்த பிறகு நாம் முன்னெடுத்து இருக்க கூடிய முக்கியமான திட்டத்திற்கு, வைத்திருக்க கூடிய பெயர்களை பார்த்தீங்கன்னா… ”பாரத்” என்கின்ற வார்த்தை இருக்கும். பிரதமருடைய விமானத்தினுடைய கோட் சைன். ஒவ்வொரு  பிரதமருக்கும் ஒருகோட் சைன் இருக்கும் விமானத்திற்கு… அதையும் ”பாரத்” என்று மாற்றியாச்சு. அதை மாற்றி பல ஆண்டுகள் ஆகுது. எனவே

எதிர்க்கட்சி நண்பர்கள் என்னன்னா….  எப்படி சொல்றது ? சில பேருக்கு ( அப்செசிவ்-கம்பல்சிவ் கோளாறு ) Obsessive–compulsive disorder (OCD) என ஒரு நோய் இருக்கு. எப்பவுமே அவங்கள பத்தி தான் மக்கள் பேசுவாங்க அப்படின்னு… ஓஹோ…  இந்தியா ஏன் வளருது. இந்தியா என பெயர் வச்சதால வளருது. இன்னைக்கு ஏன் சூரியன் கிழக்கில் உதிக்குது ? இந்தியான்னு பேரு வச்சதால தான்  சூரியன் கிழக்கில் உதிக்குது இப்படி சொல்லுறவுங்களுக்கு நான் எப்படி கருத்து சொல்ல முடியும் என தெரிவித்தார்.