தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்ட நிலையில் 1.6 கோடி மகளிர்க்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தும் பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வங்கிகள் தங்களது நிர்வாக காரணங்களுக்காக மகளிர் உரிமைத்தொகை பணத்தை பிடித்தம் செய்யக் கூடாது என்று வங்கிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் மகளிர் உரிமை தொகையை பிடித்தம் செய்யக்கூடாது என தமிழக அரசும், வங்கிகளும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்தன. ஆனால், இதனை மீறி சில வங்கிகள் மகளிர் உரிமை தொகையை பிடித்தும் செய்துள்ளன. எனவே ஒப்பந்தங்களை மீறிய வங்கிகளின் பரிவர்த்தனைகள் வேறு வங்கிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்படும். வங்கிகளுக்கு அறிவுறுத்தல் வழங்க மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்படும் என அரசு அறிவித்துள்ளது.