திமுக மேடையில் பேசிய திண்டுக்கல் லியோனி, 1967 திமுக ஆட்சிக்கு வர்றதுக்கு முன்னாடி என்ன பிரச்சனையை கிளப்பினான்னா…. திமுக ஆட்சிக்கு வந்திருச்சு….  அவங்க எல்லாம் கடவுள் இல்லைன்னு சொல்றவங்க….  ஆட்சிக்கு வந்த உடனே எல்லா இந்து கோயிலை மூடிடுவாங்க….  எல்லா சர்ச்சையும் மூடிடுவாங்க….  நாம்  எல்லாம் சாமி கும்பிடுவதற்கு முடியாது….

முளைப்பாரி எடுக்க முடியாது….. மாரியம்மன் திருவிழா கொண்டாட முடியாது…. கும்பகோணத்தில் போய் குளிக்க முடியாது…. ஐயப்பன் கோவிலுக்கு பாதயாத்திரை போக முடியாது…. ஆஹா ஓஹானு பிரச்சாரம் பண்னாங்க . ஆனால் 1967 அண்ணா முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் அந்த வருஷமே கும்பகோணத்தில் மகாமகம் திருவிழா நடந்துச்சு…

ஒன்றரை லட்சம் பக்தர்கள் அந்த இடத்துக்கு வருவாங்க அப்படின்னு கணிச்சு அந்த ஒன்றரை லட்சம் பக்தர்களுக்கும், அனைத்து வசதிகளையும், கட்டிடங்களை கட்டிக் கொடுத்து, அந்த மகாமகம் விழா கும்பகோணத்தில்…  இந்து மதத்தின் திருவிழா நடத்துவதற்கு அனைத்து வசதிகளையும் செய்தவர் யார் தெரியுமா ? அன்று பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த என் தானைத் தலைவர் டாக்டர் கலைஞர்.

இந்து மதத்தை அவர்கள் ஒழித்து விடுவார்கள் என்ற பிரச்சாரத்தை முறியடித்து….  மகாமகம் திருவிழாவிற்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்த பொதுப்பணித்துறை அமைச்சர் நம் தலைவர் கலைஞர். அதனாலதான் அவர் சொல்வார்….  நாங்கள் பகுத்தறிவு பிரச்சாரத்தை  நிறுத்த மாட்டோம், பக்தி மார்க்கத்தையும் தடுக்க மாட்டோம். அதைத்தான் பராசக்தியில்  சொன்னார். கோயிலில் குழப்பம் விளைவித்தேன்…. கோயில் கூடாது என்பதற்காக அல்ல…. கோயில் கொடியவர்களின் கூடாரம் ஆகிவிடக் கூடாது என்பதற்காக என  பராசக்தியில்  பேசிய அந்த வசனத்தை இன்று வரை நடைமுறைப்படுத்தி … திமுக பொறுப்பேற்று ஆயிரம் கோவில்களில் கும்பாபிஷேகம் நடந்துருச்சு.

ஆயிரமாவது கும்பாபிஷேகத்தை எங்கள்  இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு திமுக ஆட்சியில் நடத்தி இருக்காங்கன்னா….  இது இந்துக்களுக்கு எதிரான ஆட்சியா ? அதே மாதிரி இந்து சமய அறநிலைத்துறை சம்பந்த சார்பாக கல்லூரிகளை நிறுவி,  2600 ஏக்கர் நிலங்களை கைப்பற்றி,  அதை கோயில்களை ஒப்படைத்தது திமுக ஆட்சி .

இன்னைக்கு ஒவ்வொரு கோயில்களிலும் இருக்கக்கூடிய அர்ச்சகர்களுக்கு அதிகபட்ச ஊதியத்தை கொடுத்து… அவர்களுக்கு சைக்கிள் வாங்குவதற்கு நிதி கொடுத்து.. அவர்களுடைய வாழ்வாதாரத்து உயர்த்திய ஆட்சி திராவிடம் மாடல் ஆட்சி. இதைவிட ரொம்ப முக்கியம்…. கிராமங்கள்ல இருக்கின்ற  கோயில்களுக்கு எல்லாம்…. ஒவ்வொரு கோயிலுக்கும் இரண்டு கோடி நிதி உதவி வழங்கி,  கிராமங்களில் இருக்கிற கோயில்களிலும் மக்கள் வழிபாடு நடத்த வேண்டும் என்று ஆணையிட்ட ஆட்சி திராவிடம் மாடல் ஆட்சி.