தமிழகத்தில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவ தேர்வு செப்டம்பர் 19ஆம் தேதி முதல் செப்டம்பர் 27ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த நிலையில் பருவ தேர்வுக்கான வினாத்தாள் SCERT வல்லுனர் குழுக்கள் மூலமாக தயாரிக்கப்பட்ட இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் நடுநிலைப் பள்ளியை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் இதனை பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முதலில் https://exam.tnschools.gov.in என்ற இணையதளம் மூலமாக ஆசிரியர்கள் மட்டுமே பதிவிறக்கம் செய்து தேர்வு நடத்த வேண்டும் என்றும் பள்ளிகளுக்கு நேரடியாக வினாத்தாள்கள் வழங்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள EMIS கணக்கு என் வழியாக மட்டுமே வினாத்தாளை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றும் இந்த கணக்கு எண்ணில் ஏதாவது பிழை இருந்தால் பள்ளி ஆசிரியர்களின் எம் எஸ் கணக்கு எண்ணை பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு நாளுக்கு முந்தைய நாள் பிற்பகல் 2 மணி முதல் வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் இந்த வழிமுறைகளை ஆசிரியர்கள் சரியாக பின்பற்றினால் மட்டுமே அடுத்த நாள் வினாத்தாளை பதிவிறக்கம் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.