எத்தனால் விலை அதிகரிப்பு காரணமாக டாஸ்மாக்கில் குறைந்த விலை மதுபானங்கள் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூ.140 வகை மதுபானம் இருப்பு இல்லாதால் ரூ.160, ரூ.180, ரூ.240 விலை கொண்ட மதுபானங்களே அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. டாஸ்மாக்கின் 40% விற்பனைக்கு குறைந்த விலை மதுபானங்களே காரணம்.

அப்படியிருக்க, குறைந்த விலை மதுபானம் கிடைக்காமல் குடிமகன்கள் அவதியடைந்துள்ளனர். டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் வைத்து விற்கும் ஊழியர்கள் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் என டாஸ்மாக் நிர்வாகம் சமீபத்தில் எச்சரித்திருந்தது.