திமுக தொண்டர்கள்  கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின்,  துவாரகா நெடுஞ்சாலை திட்டம்.. ஹைவேஸ் ரோடு… துவாரகா 1 கிலோமீட்டருக்கு 18 கோடியாக இருந்த செலவு,  250 கோடியாக அதிகரித்து …. திட்ட மதிப்பை விட 278 மடங்கு கூடுதல் செலவு செய்யப்பட்டிருக்கு..

அயோத்தில ராமாயணம் தொடர்புடைய இடங்களை நவீனப்படுத்துவதற்காக ஒரு திட்டம் போட்டாங்க. இதுல விதிமுறைகளை மீறி ஒப்பந்ததாரர்களுக்கு தேவையற்ற சலுகை எல்லாம் தரப்பட்டிருக்கு. இதனால் அரசுக்கு எட்டு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கு.

பாரத் மாதா திட்டத்தின் டெண்டர் முறைகேடுகளை சிஏஜி அம்பலப்படுத்தி இருக்கு. ஒரு கிலோமீட்டர் தொலைவு நெடுஞ்சாலை அமைக்க நிர்ணயித்ததை விட ரெண்டு மடங்கு அதிகமா நிதி வழங்கப்பட்டது.

நாடு முழுவதும் சுமார் 600 சுங்க சாவடிகள் இருக்கு… இதுல 5  சுங்க சாவடியை மட்டும் CAG ஆய்வு செஞ்சி  இருக்கு. 600இல் 5 மட்டும் ஆய்வு செஞ்சி இருக்கு. அதுல விதிகளுக்கு புறம்பாக 132 கோடியே 5 லட்சம் ரூபாய் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாகன ஓட்டிகளிடம் இருந்து வசூலித்து இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பரனூர் என்கிற சுங்க சாவடியும் இதுல ஒன்று. பரனூர் சுங்க சாவடியில் மட்டும் ஆறரை கோடி ரூபாய் முறைகேடாக  வசூலிச்சிருக்காங்க.  நாடு முழுவதும் ஆய்வு நடத்தினால் பல்லாயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்திருக்குன்னு அந்த ஆய்வறிக்கை சொல்லுது

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் விமான இயந்திர வடிவமைப்புல 159 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் ஓய்வூதிய திட்ட பணத்தை எடுத்து ஒன்றிய அரசு விளம்பரத்திற்காக பயன்படுத்தி இருக்காங்க. இப்படி என்னென்ன முறைகேடுகள் ? எவ்வளவு கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டு ? இருக்குனு மத்திய அரசினுடைய கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய அந்த ஆய்வறிக்கை தெளிவாக எடுத்துச் சொல்லி இருக்கு.

ஒன்றிய அரசு துறைகளில் ஏழு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்து இருக்கு. ஊழலை பற்றி உள்துறை அமைச்சர் மாண்புமிகு அமித்ஷா அவர்கள் அதிகம் கவலைப்படுகிறார் என தெரிவித்தார்.