
நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, உங்களில் பல நண்பர்களை எனக்கு தெரியும். நீங்கள் இந்தியாவின் மனது என்ன ? இந்தியாவின் திறமை என்ன ? ஆச்சரியம் என்ன என்பதை அறிந்தவர்கள். வேஷம் மாற்றிக் கொண்டு, மக்களை ஏமாற்றியவர்களுடைய உருவம் வெளியே வந்து தான் ஆக வேண்டும். வெறும் பெயரை மட்டும் நம்பி வாழ்பவர்கள், அவர்களுக்காக சொல்லப்பட்டிருக்கிறது என்னவென்றால் ?
யுத்தத்தில் இருந்து வெகு தூரம் ஓடுவார்கள். ஆனால் பெயர் வைத்துக் கொள்வார்கள் ரணதீர் என்று… பாக்கியம் என்னவோ நிலவை சென்று விடுவதற்கான ஆசை. ஆனால் அதிர்ஷ்டம் என்னவோ மாடு மேய்ப்பதற்கு தான் என்பது போல் இருக்கிறது இவர்களுடன் பெயர். இவர்களுடைய துன்பம் என்னவென்றால் ? தங்களை தாங்களே உயிரோடு வைத்துக்கொள்ள இவர்களுக்கு NDAவின் உதவி தான் தேவைப்படுகிறது.
அதற்கும் NDA உதவியை தேடி இருக்கிறார்கள். ஆனால் தங்களுடைய செயல்பாட்டின் உடைய அடிப்படையில், அவர்களுடைய கர்வத்தின் காரணமாக… NDAயில் 2 I புகுத்தி இருக்கின்றார்கள். முதலாவது I 26 கட்சிகளின் கர்வம், ஆனவம். இரண்டாவது ஒரே ஒரு குடும்பத்தின் ஆணவம். NDAயையும் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். I.N.D.I.A என்று கட்சிக்குபெயர் வைத்து இருக்கிறார்கள் என தெரிவித்தார்.