
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மாநில துணை தலைவர் வி.பி துரைசாமி, 5 மாநில தேர்தல் முடிவுகள் தமிழ்நாட்டிலும் வெகுஜோராக பிரதிபலிக்கும். மத்திய அரசாங்கத்தில் ஊழல் அற்ற முறையில்…. மக்கள் வரிப்பணம் மக்களுக்கு வந்து சேருகின்ற வகையில் ஆட்சி நடத்துகின்ற ஒரு கட்சி, பிஜேபி கட்சி. அதனுடைய பிரதமர் மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள். அவரை தான் மக்கள் விரும்புகிறார்கள்…. உறுதியாக நான் ஏற்கனவே தெரிவித்தேன் 2/3 மெஜாரிட்டி வாங்குவோம்…
இந்தியா கூட்டணி பரிதாபத்திற்குரியவர்கள். தெலுங்கானாவில் நாங்க தோற்கவில்லை. 1 இருந்தது இப்போ 11 ஆக மாற்றி இருக்கின்றோம்… அதே போல 10% ஓட்டும் அதிகமாக வாங்கி இருக்கின்றோம்… நாங்கள் வளர்ச்சி பாதையில்…. வேகமா போயிட்டு இருக்கின்றோம்…
கான்ஸ்டியூசனல் அத்தாரிட்டி தமிழக சபாநாயகர் அப்பாவு என்னை ED மிரட்டுறாங்க…. மத்திய சர்காரில் இருந்து மிரட்டல் வருகிறது…. உருட்டல் வருது…. செல்போன் நம்பர் எல்லாம் மாத்திக்கங்கன்னு சொன்னாங்க அப்படிங்கிற கருத்தை அவர் தெரிவித்து இருக்காரு….. ஒரு பெரிய பொறுப்பில் இருப்பவர் பொறுப்பில்லாமல் கருத்தை தெரிவித்து இருக்கிறார் என்பது தான் என்னுடைய கருத்து என தெரிவித்தார்.