
செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் கௌதமன், இந்தியா உடனடியாக தன்னுடைய வேலையை செய்யணும். இந்தியாவினுடைய வெளி உறவு கொள்கைதான் இவ்வளவு தோல்விக்கும் காரணம். சீனா உள்ள வந்ததுக்கும் இந்தியா வெளி உறவு கொள்கை தான் காரணம். வெளியுறவு கொள்கையை மாத்திக்கணும்…. அதனால் துவாரகா அவர்களோடு இந்தியா பேச்சு வார்த்தை நடத்தும் சூழலில், தமிழீழ மண்ணுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கு மட்டுமல்ல…
மனித குலத்துக்கு தேவையான அண்ணன் பிரபாகரன் வெளியே வருகிற அந்த சூழலில் விரைவில் வரும் என்பதை நான் இந்த நேரத்தில் உங்களிடம் உரிமையோடு தெரிவித்துக் கொள்கிறேன். சில கேள்விகளுக்கு மட்டும் தான் பதில் சொல்ல முடியும், அதுதான் அளவுகோலாக நான் பார்க்கிறேன். துவாரகா எங்கிருந்து பேசுறாங்கங்கிறது எனக்கு தெரியும், நான் சொல்ல மாட்டேன் என்கிறது இல்லை.. எனக்கும் தெரியாது என்பதுதான்….
உண்மையாக சொன்னால் நீங்க உலகத்தில் எந்த போராட்ட களத்தில் நிற்கிற… போர்க்களத்தில் நின்ன…. யாருக்கும் இல்லாத ஒரு சொல்லாடல் ”நிறைவாகும் வரை மறைவாக இரு” என்பது அவர்களுடைய கருத்து. புலி என அவங்க பெயர் வச்சது பாயறதுக்கு மட்டுமல்ல, பதுங்குறதுக்கும் சேர்த்து தான்…. அதனால எப்போ எப்படி வருமோ, அப்படி வரும்… அது உங்களுக்கும் வரும்.
நான் துவாரகா உடன் ஆடியோ கால்ல தான் பேசினேன். ஒரு விடயம் என்ன என்றால் ? எந்த சூழலிலும் பின் வாங்காமல்…. தமிழினத்திற்காக நிற்கிற…. போராட்ட களத்தில் நிற்கிற ஒருவனாக என்னை உங்களுக்கு தெரியும்னு நான் நினைக்கிறேன்…. அதுவே சுவாசமாகக் கொண்டு….. அதே தக்கிபோட இந்த இனம் விடுதலை அடைந்து விடனும் என்று ஐநா சபைக்கு மூன்று முறை போய் பேசி இருக்கேன்…
என்னுடைய ஆவணப்படம் அங்கு திரையிடப்பட்டிருக்கு… 20க்கும் மேற்பட்ட ஆவண படங்களை நான் எடுத்து இருக்கேன்…. இனி என்ன செய்யப் போறோம்? இறுதி யுத்தம், விழ விழ எழுவோம்… ரத்தக்காட்டு ராஜபக்சே… எங்களப்பா…. இப்படி எண்ணற்ற படைப்புகள்… உலகத்தினுடைய பல நாடுகளுக்கு நான் போயிருக்கேன்… அவர்கள் அழைத்து நான் போயிருக்கேன்…. கனடாவுக்கு மூணு முறை… ஐரோப்பிய நாடுகள்…. லண்டன் இப்படி எல்லாம் போயிருக்கேன்… அதனால் அவ்வளவு தான் சொல்ல முடியும் என தெரிவித்தார்.