இன்றைய டிஜிட்டல் உலகில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவது என்பது சவாலான காரியமாகப் பலருக்குத் தோன்றும், குறிப்பாகப் படிக்கத் தெரியாதவர்களுக்கு. ஆனால், புனேவைச் சேர்ந்த அனிதா வர்மா தனது வீட்டில் வேலை செய்யும் ஜர்னா என்ற பெண் செல்போனைப் பயன்படுத்தும் விதத்தைப் பார்த்து வியந்து ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
மேற்கு வங்கத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஜர்னாவுக்குப் படிக்கத் தெரியாது என்பதால், அவர் தனது போனில் உள்ள எண்களைப் பெயர்களுக்குப் பதில் எமோஜிகளைக் கொண்டு சேமித்துள்ளார். ஒவ்வொரு நபருக்கும் ஒரு அடையாளமாக ஒரு எமோஜியை அவர் மிகக் கவனமாகத் தேர்ந்தெடுத்துள்ளார்.
View this post on Instagram
உதாரணமாக, அனிதா வர்மாவின் எண்ணை ‘அன்னப்பறவை’ எமோஜியிலும், மற்றொரு முதலாளியின் எண்ணை ‘கோவில்’ எமோஜியிலும் சேமித்துள்ளார். அதற்குக் காரணம் அந்த முதலாளியின் வீடு கோயிலுக்கு அருகில் இருப்பதே ஆகும். “படிக்கத் தெரியவில்லை என்றாலும் இவரே உண்மையான புத்திசாலி.
வாழ்க்கைத் திறமைதான் முக்கியம்” என்ற கேப்ஷனுடன் பகிரப்பட்ட இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது. “அறிவு என்பது பள்ளிக் கல்வியில் மட்டுமல்ல, அன்றாடப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில்தான் இருக்கிறது” என நெட்டிசன்கள் ஜர்னாவின் இந்தச் செயலைப் பாராட்டித் தள்ளி வருகின்றனர்.
