சூரத் லிம்பயாத் பகுதியில் வசித்து வந்த இஷ்ரத் (37) என்ற பெண், தனது கணவர் சையத் என்பவரைக் கொலை செய்த வழக்கில் கைதாகியுள்ளார். போலீஸ் விசாரணையில் இஷ்ரத் அளித்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் டைல்ஸ் வேலை பார்க்கும் சையத், மாதம் ஒருமுறை வீட்டுக்கு வரும்போதெல்லாம் ‘செக்ஸ்’ உணர்வைத் தூண்டும் மாத்திரைகளைச் சாப்பிட்டுவிட்டு, தன்னை மிகக் கொடூரமாகப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக அந்தப் பெண் கூறியுள்ளார்.

இந்த டார்ச்சரைத் தாங்க முடியாமல், கடந்த ஜனவரி 1-ம் தேதியே மஞ்சள் பாலில் எலி மருந்து கலந்து கொடுத்துக் கொல்ல முயன்றுள்ளார். ஆனால், அன்று அவர் சாகவில்லை.

இதையடுத்து 4 நாட்கள் காத்திருந்த இஷ்ரத், ஜனவரி 5-ம் தேதி இரவு மீண்டும் தனது கணவரைத் தாக்கி, துணிச்சலாகக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.

கணவர் நோயால் இறந்துவிட்டதாக இஷ்ரத் நாடகமாடியுள்ளார். ஆனால், சையத்தின் உடலை பீகாரில் உள்ள சொந்த ஊருக்குக் கொண்டு செல்ல வேண்டும் என அவரது சகோதரர் பிடிவாதம் பிடித்தார்.

இஷ்ரத் அதைத் தடுத்து, சூரத்தில் தான் அடக்கம் செய்ய வேண்டும் எனப் போர்க்கொடி தூக்கினார். இந்தச் சந்தேகத்தால்தான் போலீஸ் விசாரணை தீவிரமானது.

பிரேதப் பரிசோதனையில் அவர் விஷம் கொடுத்ததும், கழுத்தை நெரித்ததும் ஆதாரத்துடன் உறுதியானதால், இஷ்ரத் இப்போது சிறைக்குச் சென்றுள்ளார்.