
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நாங்க தனித்து போட்டியிடுகிறோம். ஒற்றை கட்சி ஆட்சி முறையை ஒழிக்கணும்னு நினைக்கிறோம். நீங்க தனிச்சு போட்டியிடா வெல்ல முடியுமா ? என்றெல்லாம் கேட்கக்கூடாது. அம்மையார் ஜெயலலிதா தனிச்சு போட்டியிட்டு 38 இடம் வெல்லலையா ?
இந்த மண்ணில் நான் தான் தலைவன். என் மக்களின் பிரச்சினை தான் பிரதமர் வேட்பாளர். என் மக்களின் பிரச்சனைக்கு எவன் கவலையோடும், கண்ணீரோடும் போய் அவர்களோடு கை குலுக்கி நிற்கிறானோ, அவன் தான் தலைவன். பிரதமர் யார் இருந்தா ? எனக்கென்ன….. என்னுடைய கச்சதீவு மீட்கப்படுமா ? பாரதிய ஜனதாவின் நிலைப்பாடு நிலை என்ன ? காங்கிரஸின் நிலைப்பாடு என்ன ? கொடுத்தது கொடுத்தது தான், திருப்பி எடுக்கணும் என்ற பேச்சுக்கே இடமில்லை.
காவேரியில் ஒரு சொட்டு தண்ணீர் இல்ல. காங்கிரஸ் வந்தாலும், பாரதிய ஜனதா வந்தாலும்… யாரு வந்தாலும் நீ அதான் சொல்ற. அப்புறம் எனக்கு எதுக்கு இந்த கட்சி ?அது பிரதமரா இருந்தா என்ன ? அமெரிக்கா அதிபரா இருந்தா எனக்கு என்ன ? ஒன்னும் இல்லையே… பலமுறை சொல்லிட்டேன். நான் தனிச்சு தான் போட்டியிட்டு வாரேன். நீங்க பாக்குறீங்க. நான் ஒரு விழுக்காடு 1.1% இருக்கும் போதும் தனித்து நின்றே.ன் 4 விழுக்காடு, 5 விழுக்காடா இருந்தபோதும் தனித்து தான் நின்றேன். இப்ப ஏழு விழுக்காடா இருக்கும்போதும் தனிச்சு தான் நிற்பேன் என பேசினார்.