
கர்நாடக மாநிலம் பழங்குடியினர் நலத்துறை மந்திரியாக இருந்தவர் நாகேந்திரா. வால்மீகி கார்ப்பரேஷன் மோசடி வழக்கில் ரூபாய் 86.63 கோடி மோசடி செய்ததால், பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அமலாக்கத்துறை மூலம் கைது செய்யப்பட்டு மூன்று மாதங்களாக சிறையில் இருந்த நாகேந்திரா நேற்று ஜாமினில் வெளியே வந்துள்ளார்.
இவர் மீது ஏற்கனவே 18 குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என எம்.எல்.ஏ ஜனார்த்தன ரெட்டி கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து நாகேந்திரா கூறியதாவது, நூறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டவர்களே நாட்டில் முதல்வராக உள்ளனர். நான் ஏன் முதல்வராக இருக்கக் கூடாது? எனக்கும் சிறப்பான எதிர்காலம் உள்ளது.
காங்கிரஸ் உண்மையான தொண்டர்களுக்கு வாய்ப்பளிக்கும். சாதாரண தொண்டனாக இருந்து தற்போது அமைச்சராகவில்லையா? இதனால் காங்கிரசுக்கு உண்மையாக உழைத்தால் சாதாரண தொண்டரையும் காங்கிரஸ் கட்சி கௌரவப்படுத்தும் எனக் கூறியுள்ளார்.