செய்தியாளிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு,  என்னுடைய செலவில்… என்னுடைய முயற்சியில் பல பணிகளை செய்துள்ளோம்…  அதே மாதிரி அங்கன்வாடி காமாட்சி நகர்,  டென்சி காலனி,  பழைய விளாங்குடி, சொக்கநாதபுரம் 2வது தெரு உள்ளிட்ட நான்கு இடங்களில் அங்கன்வாடி மையம் 20ஆவது வார்டுல மட்டும் நாலு அங்கன்வாடி மையம் அமைத்துள்ளோம். சொக்கநாதபுரம் 2ஆவது தெருவில் சமுதாயக்கூடம்  கட்டி கொடுத்துள்ளோம்… இது பூராம்  தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நியாய விலை கடை கட்டி கொடுத்துள்ளோம்..

சொக்கநாதபுரம் 2வது தெருவில் கலையரங்கம் இதே மாதிரி ஒரு கலையரங்கம் அமைத்துக் கொடுத்துள்ளோம். இதுவரைக்கும் பாத்தீங்கன்னா….  12 போர்வெல் அமைத்துக் கொடுத்துள்ளோம்.  அது போக என்னுடைய முயற்சியில் 247 கோடில பாதாள சாக்கடை….  இது  விரிவாக்க பகுதி… 100 வார்டுகளுக்கும் மதுரை மாநகரில் ஏற்கனவே இருந்த 72 வார்டுகளுக்கு மட்டுமே பாதாள சாக்கடை வசதி இருந்தது.

இப்ப மேற்கொண்டு கொண்டு நாம 100 வார்டுக்கும் விரிவாக்கப்பட்ட,  இது இரண்டு வார்டு மட்டும் தான் என்னுடைய மேற்கு தொகுதி….  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். மீதி முழுவதும் பார்த்தீங்கன்னா…  முழுக்க முழுக்க நம்முடைய இன்னைக்கு இருக்குற

வணிகவரித்துறை அமைச்சருடைய பகுதியில் அமைகிற 14,  15 வார்டுகளுக்கு அவருடையது….  மீதி திருப்பரங்குன்றம் பகுதி….  இத்தனைக்கும் இப்போ பாதாள சாக்கடை அமைப்பதற்கு அண்ணன் மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடியார் அவர்களுடைய ஆணைக்கிணங்க,  அன்றைக்கு இருந்த உள்ளாட்சித் துறையின் மேலான உதவியோடு,  இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.