சென்னையில் உலக தரமான இசை நிகழ்ச்சி நடக்க வேண்டும் என ஏ ஆர் ரகுமான் தெரிவித்திருக்கிறார்.

நேற்றைய தினம் ”மறக்குமா நெஞ்சம்” என்னும் தலைப்பில் ஏ.ஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சி நடந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்கள் ஏராளமானோர் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.  அங்கே கடும் கூட்டம் நெரிசலில் ஏற்பட்டிருக்கிறது. இதனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது பல்வேறு புகார்களும்  வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஏ.ஆர் ரகுமான் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார்.

சென்னையில் இசை நிகழ்ச்சியின் போது போக்குவரத்து நெரிசல் குளறுபடிகள் தொடர்பாக இன்ஸ்டாகிராமில் ஏ.ஆர் ரகுமான் பதிவிட்டு இருக்கிறார். மக்கள் விழித்துக் கொள்ள நானே பலியாடு ஆகிறேன் என ஏ.ஆர் ரகுமான்  இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்து இருக்கிறார்.

சென்னையில் உலக தரமான இசை நிகழ்ச்சி நடக்க வேண்டும் என்றும் அவர் அந்த இன்ஸ்டாகிராம் பதிவில் கூறி இருக்கிறார். போக்குவரத்து மேலாண்மை, கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துதல், விதிகளை பின்பற்றுவது குறித்தும் அந்த இன்ஸ்டாகிராம் பதிவில் ஏ.ஆர் ரகுமான் தெரிவித்திருக்கிறார். மேலும் குழந்தைகள்,  பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் உருவாக வேண்டும் எனவும் ஏ.ஆர் ரகுமான் கருத்து தெரிவித்திருக்கிறார்.