மதுரையில் நடந்த அதிமுக எழுச்சி மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி  கே.பழனிசாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் காவிரி நதிநீர் பிரச்சினை 50 ஆண்டு காலமாக தீர்க்க முடியாத பிரச்சனை. இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்கள் சட்ட போராட்டம் நடத்தி அந்த காலகட்டத்தில் துரதிஷ்டவசமாக அம்மா அவர்கள் இந்த மண்ணிலே மறைந்தார்கள். அம்மாவுடைய அரசு தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி 50 ஆண்டு காலத்திற்கு விவசாயிகள் போராடி வந்த அந்த காவிரி நதிநீர் பிரச்சினையை உச்ச நீதிமன்றத்தின் மூலமாக தீர்ப்பை பெற்ற அரசாங்கம் அண்ணா திமுக அரசாங்கம்,

அதேபோல டெல்டா பாசன விவசாயிகள் தங்களுடைய பொன் விளைகின்ற பூமி பரி போய்விடும் என்ற அச்சத்தில் இருந்தார்கள். என்னிடத்தில் டெல்டா பாசன விவசாயிகள் கோரிக்கை அளித்தார்கள். எங்களுடைய நிலம் மீத்தேனுக்கு எடுக்க போகிறார்கள் என்று செய்தி வந்து கொண்டிருக்கிறது. ஆகவே எங்களுடைய நிலத்தை பாதுகாத்துக் கொடுங்கள் என்று சொன்னார்கள்.

நான் ஒரு விவசாயி. ஒரு விவசாயி ஒவ்வொரு விவசாயியும் ரத்தத்தை வியர்வையாக மண்ணிலே சிந்தி உழைத்து தான் அவன் ஏற்றம் பெற முடியும். இரவென்றும் பகல் என்றும் பாராமல் உழைக்கின்ற ஜாதி விவசாய ஜாதி. அவர்களுடைய கஷ்ட நஷ்டத்தை புரிந்து இருந்தேன். உடனடியாக மத்திய அரசை தொடர்பு கொண்டு, டெல்டா விவசாயிகள் எங்கள் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று,

கோரிக்கை வைக்கிறார்கள் அதை நிறைவேற்றி கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசிலே கோரிக்கை வைத்ததுடன்,  மத்திய அரசும் நம்முடைய கோரிக்கையை ஏற்று நம்முடைய விவசாயிகள் டெல்டா மாவட்டத்தில் இருக்கிற விவசாயிகள் வயிற்றிலே பால் வார்க்கின்ற விதமாக பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று அறிவிக்கப்பட்ட அரசாங்கம் அண்ணா திமுக அரசாங்கம் என தெரிவித்தார்.