இந்தக் கடுமையான குளிர்காலத்தில் தினசரி குளிப்பதே ஒரு சிரமமான காரியமாகத் தோன்றும் நிலையில், உறைய வைக்கும் பனிக்கட்டிகள் சூழ்ந்த ஆற்றில் ஒரு இளம்பெண் சாகசம் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோவைப் பார்த்தாலே குளிர் தாக்கி நடுங்கத் தோன்றும். வீடியோவின் தொடக்கத்தில் குளிரான, அழகிய காட்சி தெரிகிறது. அதில் இருந்து வெளியே வரும் அந்தப் பெண்மணி, தான் குளித்த பனியின் குளிர்ச்சியை வெளிப்படுத்தும் விதமாகப் பாவனை செய்கிறார்.

பின்னர், பனிக்கட்டிகளால் செய்யப்பட்ட ஒரு கிரீடத்தை எடுத்துத் தலையில் அணிந்துகொண்டு, போரில் வெற்றி பெற்றவர் போலக் காட்சியளிக்கிறார். அந்த வீடியோவில், அந்தப் பெண் பனிக்கட்டியால் செய்யப்பட்ட ஒரு கொம்பையும் பிடித்து, அதில் நீரைக் குடித்துவிட்டு துப்புவது போலவும் சாகசம் செய்கிறார். இந்தக் காட்சி பார்ப்பவர்களைச் சற்று பயத்துடனும் வியப்புடனும் பார்க்க வைக்கிறது. இந்தச் சாகச வீடியோ (@TheFigen_) என்ற பயனர் பெயரில் எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்டு, இதுவரை 6 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.

இந்த வீடியோவைக் கண்ட ஒரு பயனர், “இதைப் பார்த்தாலே எங்கள் எலும்புகள் உறைந்து விட்டன” என்று கமெண்ட் செய்துள்ளார். மற்றொரு பயனர், “இது தைரியமா இல்லை பைத்தியக்காரத்தனமா என்று தெரியவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் பலர், குளிர் நீரில் திடீரெனச் செல்வது ஆபத்தானது என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.