
திருச்சி மாவட்ட திமுக அணிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யா மொழி, பள்ளிகல்வித் துறை அமைச்சராக நான் பொறுப்பேற்றப் பிறகோ, என்னவோ என்று எனக்கு தெரியவில்லை. இதுபோன்று இயக்கத்தின் முத்த தலைவரை வரவழைத்து,
ரிப்போர்ட் கார்டு கொடுக்கணும்னு நான் ஆசைப்பட்டேன். அதற்கான ரிப்போர்ட் கார்டு தான் இன்னைக்கு நம்முடைய தலைமையாசிரியராக அமர்ந்து இருக்கின்ற பொதுச் செயலாளர் அண்ணன் துரைமுருகனிடம், நாங்க என்ன எல்லாம் செஞ்சி கொண்டிருக்கிறோம்? நாங்க காமிச்சது வெறும் கலைஞரோட நூற்றாண்டு கொண்டாட்ட விழா மட்டும் தான்.
ஆனால் அதற்கு முன்பு நாங்க என்னென்னப் பணியாற்ற்றினோம் என்று சொன்னால்…. அண்ணன் இங்க நாள் முழுதும் உட்கார்ந்திருக்கிற மாதிரி ஆயிடும்…. அதனால் தான் இந்தாண்டு ஜீன் மாதத்தில் இருந்து நாங்க என்ன செஞ்சோம் என்பதை உங்களுக்கு காமிச்சு இருக்கிறேன். ஆனால் ஓன்று மட்டும் நிச்சயம்…ஐந்து முறை அண்ணன் வர வேண்டியது, அது தடைப்பட்டு போனது என்பது அவருக்கான அலுவல்…
இவ்வளவு பெரிய இயக்கத்தினுடைய பொதுச் செயலாளர் என்கிற அந்தப் பணி, அவர் ஏற்றுக் கொண்டிருக்கின்ற அந்தப் பணி, ஒரு குடும்பத் தலைவர் என்கிறப் பணி….. இப்படி ஒவ்வொரு பணியின் காரணமாக ஏதோ ஒரு விதத்தில் அது தடைப்பட்டது என்று சொன்னாலும், ஐந்து முறை தடைபட்டது…. ஆறாவது முறை நான் வருகின்றேன்… அது 60 வது நிகழ்ச்சியாக இருக்கட்டும் என்கின்ற வகையிலே இன்றைக்கு நாங்கள் அதைச் செய்து கொண்டிருக்கிறோம் என தெரிவித்தார்.