
சென்னை திருவொற்றியூர் பகுதியில் அல்தாப் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் நவ்பில் (17) அருகிலுள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். நவ்பில் நேற்று மாலை நேர வகுப்பிற்கு சென்ற நிலையில் இரவு நேரத்தில் வீட்டிற்கு செல்வதற்காக சாலையின் ஓரமாக நடந்து வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் தேங்கியுள்ள மழை நீரில் அருந்து கிடந்த மின் ஒயர் தண்ணீரில் விழுந்ததால் மின்கசிவு ஏற்பட்டுள்ளது.
இதனை அறியாமல் நவ்பில் தண்ணீரின் மேல் நடந்த போது மின்சாரம் தாக்கிய நிலையில் தூக்கி வீசப்பட்டார் இதனைக் கண்டு அருகிலிருந்தவர்கள் உடனடியாக மாணவனை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.
இந்த தகவல் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் மருத்துவமனைக்கு வந்து மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதை தொடர்ந்து 12ஆம் வகுப்பு மாணவரின் உயிர் நிலத்திற்கு காரணம் மின்வாரியத்தின் அலட்சியம் தான் என்று 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திருவொற்றியூர் நெடுஞ்சாலை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.