
ஓபிஎஸ் அணி சார்பில் நமது புரட்சித் தொண்டன்” புதிய நாளிதழ் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய ஓபிஎஸ் அணியின் நிர்வாகி புகழேந்தி, நேரம் கடந்து கொண்டிருப்பதால் நான் பாராட்டியே ஆக வேண்டும் என்று சொல்லி இரண்டு நிமிடங்கள் மாத்திரம் எடுத்துக் கொள்கிறேன். ஏனென்றால் நேத்து எல்லாம் பேசி முடித்தாகிவிட்டது. இரவு கழிந்தது காலையில் நாம் சந்திக்கிறோம். இன்னைக்கு காலையில புறப்பட்டு வெளியே வரும்போது…
ஒரு நண்பர் என்னை புடிச்சுட்டாரு. ரொம்ப யங், ரொம்ப சின்ன வயசு. ஓடி வந்து பிடிச்சு… ஏன்யா! உங்க அரசியல நீங்க பண்ணிக்கோங்க, சண்ட பண்ணிக்கோங்க, எதுனாலும் பண்ணிக்கோங்க எங்களிடம் ஏங்க சண்ட பண்றீங்க என கேட்டார். என்ன சண்டை என்று நான் கேட்டேன் ? இல்ல நீங்க மோதிக்கோங்க… ஏதோ பண்ணிக்கோங்க…
எங்ககிட்ட போய் தகராறு பண்றீங்கன்னு வழி மறிச்சாரு. நான் என்னங்க பண்ணேன்… உங்ககிட்ட போய் தகராறு என சொல்லுங்க, அப்படின்னு கேட்டேன்.. இல்ல, இல்ல ”புரட்சி தமிழன்” எப்படின்னு சொல்லலாம், அப்படின்னு கேட்டாரு. நான் சொன்னேன்…
நாங்க சொல்லலப்பா புரட்சி தமிழன் என்று சொல்லி… அத தகரம் தான் சொல்லுச்சு. மதுரையில் இருந்து… நாங்க எங்க தலைவர தங்கம்னு சொல்லிட்டு இருக்கோம். தகரத்துக்கும் தங்கத்துக்கும் முதல்ல வித்தியாசம் தெரிஞ்சிக்கோன்னு சொன்னேன்.
அந்த ஆளு யாருன்னு பாத்தீங்கன்னா… சத்யராஜ் ரசிகர் மன்றத்துடைய ரசிக்கறாம். இது நாங்க வெச்ச பேரு. அது எப்படி அவர் உரிமை கொண்டாடலாம் கேட்டாரு ? அப்போ சத்யராஜ் கிட்ட சொல்லி கருப்பு சட்டையோட போயி போராட சொல்லு. அப்போதான் சரியா ரூட்டுக்கு வருவார் என்று சொன்னேன் என விளக்கினார்.