தமிழகத்தில் நடப்பாண்டு சட்டமன்ற கூட்டம் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் காஞ்சிபுர சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். அதாவது காஞ்சிபுரம் தொகுதியில் வீட்டு வசதி வாரியம் வாயிலாக வணிக வளாகம் கட்டித் தரப்படுமா? என கேள்வி எழுப்பினார்.

இந்த கேள்விக்கு அமைச்சர் முத்துசாமி பதிலளித்துள்ளார். இதில் தமிழகம் முழுவதும் வீட்டு வசதி வாரியம் மூலம் 10,000 குடியிருப்புகள் 60 இடங்களில் மோசமாக இருந்த நிலைகளில் உள்ள வீடுகளை இடித்து புதிதாக வீடுகளை கட்டித் தர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

அந்தந்த மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மூலம் தகவல்கள் பெறப்பட்டு வருகிறது. கடந்த ஆட்சியில் வீட்டு வாரியம் மூலம் கட்டப்பட்ட 6,912 வீடுகள் நிலுவையில் உள்ளதால் அவற்றில் இந்த நடப்பாண்டில் 2,212 வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள விற்கப்படாத வீடுகளை வாடகை வீடுகளாகவும் அறிவிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு பதிலளித்தார்.