சென்னை ஷெனாய் நகரில் திமுக சமூக வலைதள தன்னார்வலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு முதல்வர் ஸ்டாலின் பேசினார். நம்முடைய செய்திகள் உண்மையானதாக இருக்க வேண்டும்.  பாஜகவினை போல போலியாக இருக்கக் கூடாது. அவங்களுக்கு இப்ப ஒரே ஒரு தேவைதான்.  என் மனைவி துர்கா ஸ்டாலின் எந்த கோயிலுக்கு போறாங்கன்னு பார்க்கிறாங்க. அங்க போய் போட்டோ எடுத்துட்டு பாத்தீங்களா…  கோவிலுக்கு போறாங்கன்னு பரப்புறாங்க

தமிழ்நாட்டில் இருக்கிற எல்லா கோயிலுக்கும் தான் அவங்க போய்கிட்டு இருக்காங்க. அது அவங்களோட விருப்பம். அதை நான் தடுக்க விரும்பவில்லை, தடுக்க தேவையில்ல. நாங்கள் ஆரிய ஆதிக்கத்திற்கு தான் எதிரிகளே  தவிர,  ஆன்மீகத்திற்கு எதிராக எதிரிகள் அல்ல.

கோவிலும்,  பக்தியும் அவரவர் உரிமை. அவரவர் விருப்பம். ஏராளமான கோயில்களில் நுழைவு போராட்டங்கள் நடத்தி வெகு மக்களோட வழிபாட்டு உரிமையை வாங்கிக் கொடுத்தது நம்முடைய திராவிட இயக்கம். தலைவர் கலைஞர் அவர்களுடைய ஆதிபராசக்தி டயலாக் தான் அவர்களுக்கு பதிலா இருக்கு.

கோயில்கள் கூடாது என்பதல்ல,  கோயில்கள் கொடியவர்கள் கூடாரமாக ஆகிவிடக் கூடாது. பாஜக கோவிளையும்,  பக்தியையும் தனது அரசியலுக்கு சாதகமாக பயன்படுத்த நினைக்கிறது. ஆன்மிகத்தை மிகச் சரியாக பக்குவப்படுத்தி பார்க்கத் தெரிந்தவர்கள் தமிழ்நாட்டு மக்கள் என பேசினார்.