திராவிட நட்பு கழகத்தின் சார்பில் நடந்த மத நல்லிணக்க மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்துத்துவா என்பது பெரும்பான்மை வாதத்தை முன்னிறுத்துகிற செயல் திட்டம். இந்துத்துவா என்பது இஸ்லாமிய வெறுப்பு அரசியல். இந்துத்துவா  என்பது கிருஸ்துவ வெறுப்பு அரசியல்.

இந்துத்துவா என்பது மதத்தின் அடிப்படையிலான வன்முறை அரசியல். இந்துத்துவா என்பது பாபர் மசூதியை இடிக்கிற அரசியல். இந்துத்துவா என்பது ராமரை வைத்து அரசியல் ஆதாயம் தேடுகிற அரசியல். ஆதாயம் தேடுகிற அரசியல். இது பிஜேபியின் செயல் திட்டம். இந்துத்துவாவுக்கும் இந்து மதத்தின் கோட்பாட்டிற்கும் சம்பந்தமில்லை. 

ஹிந்துக்களின் உணர்வுகளை ஆர்எஸ்எஸ்-சும், பிஜேபியும் பயன்படுத்துவதற்காக கையாளுகிற ஒரு உத்தி தான் இந்துத்துவா. சனாதனம் தான் பார்ப்பனியம், பார்ப்பனியம் தான் இன்றைக்கு இந்துத்துவா என்று விரிவடைந்து இருக்கிறது. ஏனென்றால் ஆதி காலத்திலிருந்து பார்ப்பனர்களை தனிமைப்படுத்துகிற முயற்சி தொடர்ச்சியாக நடந்திருக்கிறது. இன்றைக்கு நேற்று அல்ல. பெரியார் காலத்துக்கு முன்பிருந்தே இகழ்ந்திருக்கிறது.

நம்மளுடைய அருள் தந்தை ஜெகத் கஸ்பர் … வள்ளலாரை பற்றி போகிறப்போக்கிளே சொல்லிவிட்டு போனார். வள்ளலார் 200 ஆண்டுகளாகின்றன.. பெரியாருக்கு மூப்பர் வள்ளலார்… அவரே சனாதன எதிர்ப்பாளர் தான். சனாதன எதிர்ப்பாளர் என்றால் ?  பார்ப்பன எதிர்ப்பாளர், வைதீக எதிர்ப்பாளர் என்று பொருள். அவர்களின் கொள்கையை எதிர்க்கிறோம் என்று பொருள்.  வருணாசார்ம தருமத்தை எதிர்க்கிறோம் என்று பொருள், பிறப்பின்  அடிப்படையிலான உயர்வு தாழ்வு என்கின்ற கருத்தியலை எதிர்க்கிறோம் என்று பொருள் என விளக்கினார்.