கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய தமிழக விளையாட்டுத்துறை அமைச்சரும், திமுக இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின்,  2021-ஆம் ஆண்டு கழகத்திற்கு தமிழ்நாட்டு மக்கள் வாக்களித்தார்கள். அதனால் இன்றைக்கு தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பமும் பலனடைந்து வருகின்றது. எனவே இந்த தமிழ்நாடு தான் திரு மோடி அவர்கள் சொல்லுகின்ற கலைஞர் உடைய குடும்பம். வாக்களித்தவர்கள் மகிழுக்கின்ற வகையிலும்…  வாக்களிக்காதவர்கள் வாக்களிக்காமல் விட்டு விட்டோமே” என வருந்துகிற அளவுக்கு நம்முடைய  முதலமைச்சர் அவர்கள் திட்டங்களை தீட்டி வருகின்றார்கள்.

தக்காளி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதை குறைக்க   நடவடிக்கை எடுக்க வேண்டிய நம்முடைய ஒன்றிய பிரதமர் பிளைட் எடுத்துக்கிட்டு  வெளிநாட்டுக்கு போயிருந்தாரு. மணிப்பூர் மாநிலம் நான்கு மாதங்களாக பற்றி எரிகிறது. 150 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். ஆனால் மோடி,  அவர்களை அழைத்து நேரில் பேசக்கூட இல்லை.

ஆட்சிக்கு வந்தால் எல்லாருடைய கணக்கிலும் 15 லட்ச ரூபா செலுத்துவோம்னு அன்று பாரத பிரதமர் கூறினார். ஆனால் இன்றைக்கு நாங்கள் அப்படி எல்லாம் சொல்லவே இல்ல பொய் சொல்றீங்க  அப்படின்னு சொல்றாரு. பாஜக உடைய சட்டமன்ற உறுப்பினர் அக்கா வானதி சீனிவாசன் அவர்கள் நான் பகிரங்கமா மன்னிப்பு கேட்கணும்ங்குறாரு…  நான் திரும்பவும் சொல்றேன், மன்னிப்பு எல்லாம் நான் கேட்க முடியாது. மோடி சொன்னது உண்மை. எங்க பேசுனார் ? எப்போ பேசினார் ? என்பதையும் நான் இன்று தேதியோடு சொல்கின்றேன்.

 2013-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஏழாம் தேதி குறிச்சி வெச்சிகோங்க…   சத்தீஸ்கர் மாநிலம் காங்கர் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு பிரச்சாரக் கூட்டத்தில் தான்…  நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கருப்பு பணத்தை எல்லாம் மீட்டு, ஒவ்வொரு இந்தியருடைய அக்கவுண்டிலும் 15 லட்சம் போடுவோம் என்று மோடி அவர்கள் தான் கூறினார். அதை திரு.அமித்ஷா அவர்களும்,  திரு.அருண் ஜெட்லி அவர்களும்  பாராளுமன்றத்திலே ஒப்புக் கொண்டுள்ளனர் என தெரிவித்தார்.