இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
How smoothly he stole his Phone😭 pic.twitter.com/ejt04zh3Lb
— Ghar Ke Kalesh (@gharkekalesh) July 18, 2025
அதாவது அந்த வீடியோவில் வாலிபர் ஒருவர் அவரது கடையில் அமர்ந்து பில் விவரங்களை சரிபார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது செல்ஃபோன் கடையின் மேசையில் சார்ஜ் போட்டு இருந்தது. இதையடுத்து அங்கு வந்த வாலிபர் ஒருவர் முதலில் சார்ஜரில் இருந்து செல்போனை கழட்டி விட்டார். அப்போது கடையின் உரிமையாளர் அதை கவனிக்கவில்லை
அதன் பின் மீண்டும் வந்த அதே வாலிபர் செல்போனை திருடி சென்று விட்டார், இதையும் அந்த கடையின் உரிமையாளர் கவனிக்கவில்லை. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
