கர்நாடகா மாநிலத்தில் இந்திய பிரதமர் மோடி இன்று(பிப்,.6) சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். பெங்களுருவில் “இந்திய எரி சக்தி வாரம்” எனும் நிகழ்ச்சியை துவங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சி பிப்,.6ம் தேதி இன்று முதல் 8ம் தேதி வரை நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் இருந்து 30க்கும் அதிகமான துறை சார்ந்த அமைச்சர்கள், 30,000 பிரதிநிதிகள், 1,000 கண்காட்சியாளர்கள், 500 பேச்சாளர்கள் பங்கேற்கின்றனர்.

இவர்கள் இந்தியாவின் எரிசக்தி எதிர்காலத்தின் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் பற்றி விவாதிக்க இருக்கின்றன. இந்த நிகழ்ச்சியின்போது உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் ஒரு வட்டமேசை உரையாடலில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள உள்ளார். அதன்பின் மாலையில் துமகுருவிலுள்ள எச்ஏஎல் ஹெலிகாப்டர் தொழிற்சாலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இது பிரத்யேக கிரீன்பீல்ட் தொழிற்சாலையாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இது உள் நாட்டிலேயே ஹெலிகாப்டர்களை உற்பத்தி செய்யும் திறனை அதிகரிக்க உதவும். அதே சமயத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கும்.