இந்தியாவில் முன்னணி டெலிகாம்  சேவை நிறுவனமான ஏர்டெல் நிறுவனம் அதன் 359 ரூபாய் மாதத்திட்டத்தில் தற்போது பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் 28 நாட்கள் செல்லுபடி ஆகும் அந்த திட்டம் தற்போது 31 நாட்கள் செல்லுபடி ஆகும் என அறிவித்துள்ளது. இதன் காரணமாக நமக்கு கூடுதலாக மூன்று நாட்கள் டேட்டா மற்றும் காலிங்  பயன்பாடு கிடைக்கிறது. இதில் நமக்கு தினமும் 2ஜிபி டேட்டா வசதி, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வசதி மற்றும் Airtel xstream போன்ற வசதிகள் கிடைக்கிறது. மேலும் ரூ.100 ஏர்டெல் Airtel fastag சேவை மற்றும் 3 மாதங்களுக்கான Appollo 24/7 வசதி உள்ளது.

Airtel xstream மூலமாக நமக்கு ஒரு மாதத்திற்கு sony liv, erosnow, appollo 24/7 சேவைகள் கிடைக்கிறது. இதன் மூலமாக நமக்கு மொத்தமாக 62 ஜிபி டேட்டா வசதி தினசரி டேட்டா தீர்ந்ததும் 64 KBPS வேகத்தில் இணையம் கிடைக்கிறது. மேலும் அதிகப்படியான டேட்டா வழங்கினாலும் பயனர்களைப் பொறுத்தவரை இது கூடுதல் விலையில் இருக்கும் ஒரு திட்டமாகும். இதற்கு மாற்றாக 549 திட்டம் ஒன்று உள்ளது. அதில் நமக்கு 60 நாட்கள் வரை தினமும் 2ஜிபி டேட்டா வசதி கிடைக்கிறது. மற்ற வகையில் இதில் 350 ரூபாய் திட்டத்தில் அதே வசதிகள் உள்ளது. முன்பு 28 நாட்கள் இருந்த திட்டத்தை இந்தியாவின் டெலிகாம்  சேவை அமைப்பாளர் தற்போது TRAI ஒரு மாதங்கள் அல்லது 30 நாட்களாக உயர்த்த கோரிக்கை வைத்த நிலையில் இந்த திட்டத்தின் காலத்தை தற்போது ஏர்டெல் நிறுவனம் நீடித்துள்ளது.