ஐரோப்பாவிலிருந்து இந்தியாவுக்குச் சுற்றுலா வந்த ஒரு தம்பதி, ஹிமாச்சலப் பிரதேசத்தின் சிம்லா மலைப்பாதையில் பைக்கில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக அவர்களின் பைக்கின் ‘இன்டர்னல் பேரிங்’ (Internal Bearing) பழுதாகி பாதியிலேயே நின்றது. மலைப்பாதையில் எங்குச் செல்வது என்று தெரியாமல் தவித்த அவர்களுக்கு, அங்கிருந்த ஒரு சாலையோர மெக்கானிக் கைகொடுத்துள்ளார்.
A European couple’s motorcycle broke down in Shimla, India.
A random roadside Indian mechanic, with no college degree and not even a roof or a proper workshop, instantly diagnosed the innermost bearing failure and fixed it on the spot.
Engineers would literally charge thousands… pic.twitter.com/GVmEt8zCal
— ︎ ︎venom (@venom1s) January 26, 2026
பெரிய செட் (Shed) கூட இல்லாத அந்த மெக்கானிக், கையில் இருந்த சில கருவிகளை வைத்துப் பைக்கைச் சோதனை செய்தார். சில நிமிடங்களிலேயே பிரச்னையைக் கண்டுபிடித்தவர், மின்னல் வேகத்தில் அதனைச் சரிசெய்தார்.
இதைப் பார்த்த அந்த ஐரோப்பிய நபர், “இவரது கையில் படிந்துள்ள கறைதான் இவரது அனுபவத்தைச் சொல்கிறது. இவரது கையில் பைக் இருந்தால் அது பாதுகாப்பானது என எனக்குத் தெரிந்துவிட்டது” என வியந்து பாராட்டினார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பல மில்லியன் பார்வைகளைக் கடந்து வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், “பட்டயப் படிப்பு தேவையில்லை, அனுபவம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு இந்த மெக்கானிக் ஒரு சிறந்த உதாரணம்” என்றும், “இந்தியாவின் உண்மையான திறமை இதுதான்” என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
