பீகார் மாநிலம் முசாபரில் உள்ள போகியா என்ற கிராமத்தில் கங்கா சஹ்னி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய டிராக்டரை நேற்று மர்ம நபர்கள் திருடன் முயற்சித்துள்ளனர். இதனால் சத்தம் கேட்டு எழுந்த கங்கா சஹ்னி, கிராம மக்களின் உதவியோடு ஷம்பு சஹ்னி என்ற இளைஞரை மடக்கி பிடித்தனர். அவர்களுடன் இருந்த மற்ற 3 பேரும் தப்பி ஓடினர்.

இதற்கிடையில் ஷம்பு சஹ்னியை, கங்கா சஹ்னி மற்றும் அவரது உறவினர்கள் இரவு முழுவதும் கட்டி அடித்துள்ளனர். இதில் அவர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி விரைந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதோடு கங்கா சஹ்னி மற்றும் அவரது உறவினர் புக்கார் சஹ்னி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.