முதலமைச்சராகவும், கட்சித் தலைவராகவும் நிறைய பணிகள் இருந்தாலும், ஒரு கணவனாக எனக்கு நேரம் ஒதுக்கியதோடு, தனக்கு கிடைத்த நேரத்தில் இந்த புத்தகத்தை முழுவதும் படித்து எனக்கு சில ஆலோசனைகளையும் வழங்கி, இந்த நூலுக்கு அன்பு உரையும் எழுதிக் கொடுத்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்றாலும் அவரது மனம் முழுவதும் இங்குதான் இருக்கும். நேரலையில் முழு நிகழ்வை பார்த்துக் கொண்டிருக்கும் எனது கணவருக்கு முதல் நன்றி.
அவர்தான் என்னை கண்டிப்பாக நீ இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நல்லபடியாக நடத்தி விட்டு வா என்று வாழ்த்தி அனுப்பினார். கடந்த 2010 ஆம் ஆண்டு என்னுடைய முதல் தொடர் வந்தபோது, அதன் தலைப்பு தளபதியும் நானும் தான் என்று இருந்தது. அதை என்னுடைய கணவர் தான் அவரும் நானும் என்று மாற்றினார். எப்போதும் என்னுடைய கணவர் உங்களில் ஒருவன் நான் என்று கூறுவார். நூலும் அதே தலைப்பில் வெளியிட்டார். அதேபோன்று நானும் உங்களில் ஒருத்தி ஆகவே இருக்க விரும்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
