HDFC வங்கி இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியாக மாறியுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே கடனுக்கான வட்டி விகிதத்தை HDFC வங்கி உயர்த்திய நிலையில் தற்போது மீண்டும் கடன் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதாவது அனைத்து வகையான கடன்களுக்கான மார்ஜினல் காஸ்ட் ஆஃப் லெண்டிங் ரேட் (MCLR) 15 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனால், கடனுக்கான EMI, சுமையாக மாறும். ஒரே இரவில் MCLR 8.35% லிருந்து 8.50% ஆகவும், 1 மாத கடனுக்கான வட்டி 8.55% ஆகவும், 3 மாதங்களுக்கு 8.80%, 6 மாதங்களுக்கு 9.05%, 1 வருடத்திற்கு 9.15% ஆகவும் அதிகரித்துள்ளது.