கடந்த சில மாதங்களாகவே பல்வேறு வங்கிகள் சீனியர் சிட்டிசன்களுக்கான நிலையான வைப்புத் தொகை எனப்படும் பிக்சட் டெபாசிட் மீதான வட்டியை உயர்த்தியுள்ளது. அதில் பாரத் ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கியும் அடங்கும். அதாவது பொதுவாக சீனியர் சிட்டிசன்கள் தங்கள் சேமிப்பில் ஒரு பகுதியை fdகளில் முதலீடு செய்கின்றார்கள். இது அவர்களுக்கு தேவையான பண புழக்கத்தை வழங்குகிறது. மேலும் வட்டி வருமானத்தை அவ்வபோது உறுதி செய்கிறது. இது தவிர இந்த சேமிப்பு அவர்களுக்கு ஏதேனும் ஒரு அவசர காலத்திற்கு தேவைப்படும் உதவித்தொகை உருவாக்கவும் உதவியாக இருக்கும். ஹெச்டிஎஃப்சி வங்கி டைமண்ட் டெபாசிட்டுகள் எனும் பெயரில் 75 மாதங்கள் லாகின் காலத்திற்கு நிலையான வைப்புத் தொகைக்கு ஆண்டுக்கு எட்டு சதவீதம் வட்டியை வழங்கி வருகிறது.

இதற்கான குறைந்தபட்ச முதலீடு தொகை ரூ.2 கோடியாகும். இதில் ஆன்லைன் மூலமாக புதுப்பிக்கவும் பணத்தை டெபாசிட் செய்தல் ஒட்டுமொத்த கூடுதல் ஊக்கத்தொகையாக 0.05 சதவீதம் வழங்குகிறது. மேலும் hdfc வங்கி அதன் சில்லறை முதன்மை கடன் விகிதத்தை 9.20 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. அது மட்டுமல்லாமல் வீட்டுக் கடன் சில்லறை பிரைம் லெண்டிங் ரேட்டை அதிகரித்துள்ளது. அதேபோல் அட்ஜஸ்டபிள் ரைட் வீட்டுக் கடன் 25 அடிப்படை புள்ளிகளாகவும் உயர்த்தி இருக்கிறது. மார்ச் மூன்றாம் தேதி முதல் இந்த வட்டி விகிதங்கள் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் இந்திய ரிசர்வ் வங்கி பணம் வீக்கத்தை காரணம் காட்டி பென்ஸ் மார்க் பாலிசி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி 6.5 சதவீதமாக  அறிவித்துள்ளது. மேலும் அனைத்து வங்கிகளும் அதன் MCLR வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக  எஸ் பி ஐ, எம் சி எல் ஆர் வட்டி  விகிதத்தை 10 அடிப்படை புள்ளிகள் வரை அதிகரித்துள்ளது.