இந்திய அளவில் பிரபலமான நடிகர்களாக இருக்கும் விஜய், ஷாருக்கான் மற்றும் ராம்சரண் ஆகியோருக்கு இடையே இருக்கும் காஸ்ட்லி ஒற்றுமை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதன்பிறகு பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தற்போது அட்லீ இயக்கத்தில் ஜவான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் ராம்சரண் தற்போது பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் பதான் திரைப்படம் 1000 கோடி வசூலித்து மாபெரும் வெற்றி அடைந்த பிறகு நடிகர் ஷாருக்கான் 10 கோடி மதிப்புள்ள rolls-royce காரை வாங்கினார். தற்போது ஷாருக்கான் புதிதாக வாங்கிய தன்னுடைய காரில் தான் மும்பையை வலம் வருகிறார். அதன் பிறகு நடிகர் விஜயிடமும் 10 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கார் இருக்கிறது.

சூட்டிங் இல்லாத சமயத்தில் நடிகர் விஜய் தன்னுடைய காரில் சென்னையை சுற்றி வருவார். விஜயின் காரில் பிரபலங்கள் பலரும் செல்ல விரும்புவதால் அவர்களின் ஆசையையும் விஜய் நிறைவேற்றுவார். அதன் பிறகு நடிகர் ராம்சரணிடமும் 10 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கார் இருக்கிறது. மற்ற பிரபலங்களிடம் இந்த கார் இல்லையா என கேட்டால் அனைவரிடமும் இருக்கலாம். ஆனால் விஜய், ஷாருக்கான் மற்றும் ராம்சரண் வைத்திருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் விலையை விட அவற்றின் விலை குறைவுதான். மேலும் விஜய், ராம் சரண் மற்றும் ஷாருக்கான் ஆகியரிடம் தான் 10 கோடி மதிப்புள்ள rolls-royce கார் இருக்கிறது.