தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் ரோபோ சங்கர். விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாருஎன்ற  நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ரோபோ சங்கர் தற்போது வெள்ளித்திரையில் கலக்கி வருகிறார். நடிகர் ரோபோ சங்கர் உடல் மெலிந்து ஒல்லியாக காணப்படும் புகைப்படம் அண்மையில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் ரோபோ சங்கருக்கு ஏதேனும் உடல் நலக்குறைவு ஏற்பட்டிருக்குமோ என ரசிகர்கள் பலரும் கவலை தெரிவித்தனர்.

ஆனால் ரோபோ சங்கரின் மகள் மற்றும் மனைவி படத்திற்காக தான் ரோபோ சங்கர் உடல் எடையை குறைத்துள்ளதாக விளக்கம் அளித்தனர். இந்நிலையில் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் வேஷ்டி சட்டை அணிந்துள்ள ரோபோ சங்கர் உடல் எடை மிகவும் மெலிந்து ஒல்லியாக காணப்படுகிறார். மேலும் இந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் ரோபோ சங்கரின் தற்போதைய நிலையை பார்த்து அதிர்ச்சி ஆகியுள்ளனர்.