
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நான் பலமுறை கழக மூத்த முன்னோடிகளை சந்திக்கும்போது சொல்ற ஒரே விஷயம்… இந்த மாதிரி பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது… கழகத்துடைய மூத்த முன்னோடிகள் எல்லாம் பார்க்கும்போது எனக்கு பெருமையாகவும் இருக்கும். அதே நேரத்தில் பொறாமையாகவும் இருக்கும்.
பெருமை என்ன என்றால் ? இந்த கழகத்தினுடைய வரலாறாக உக்காந்திருக்கீங்க… வரலாற்றுக்கு ஒரு எடுத்துக்காட்டா உட்கார்ந்து இருக்கீங்க…. ஆனால் பொறாமை என்னவென்றால் ? நீங்கள் எல்லாம் தந்தை பெரியாரை நேரில் பார்த்திருப்பீங்க….பேரறிஞ்சர் அண்ணாவை நேரில் பார்த்திருப்பீங்க…. தந்தை பெரியாரோடு பொதுக்கூட்டத்திற்கு போய் இருப்பிங்க… பேரறிஞர் அண்ணா உடைய பொதுக்கூட்டத்துக்கு போய் இருப்பீங்க. அவங்களோட போராட்டத்தில் கலந்து இருப்பீங்க…. சிறை சென்றிருப்பீங்க… நீங்க எல்லாம் அவர்களை நேர்ல பாத்து இருப்பீங்க.
நான் கலைஞரை மட்டும்தான் நேரில் பார்த்திருக்கிறேன்.. இனமான பேராசிரியர் தாத்தாவை நேர்ல பார்த்திருப்பேன். அதனால தான் உங்கள எல்லாம் பார்த்தா எனக்கு பொறாமையா இருக்கும். ஆனால் நான் உங்களை எல்லாம்… தந்தை பெரியாருடைய மறு உருவமாக…. இனமான பேராசிரியர் தாத்தாவின் மறு உருவமாக…. பேரறிஞர் அண்ணாவின் மறு உருவமாக…. நம்முடைய முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் மறு உருவமாக உங்களை எல்லாம் பார்த்து இருக்கேன்.
2021 தேர்தலில் நீங்கள் எல்லாம் எப்படி வெற்றிக்கு பாடுபட்டீர்களோ… அதே போல வர இருக்கின்ற 2024 தேர்தலில் கழகத்தின் மூத்த முன்னோடிகளான நீங்கள்… இளைஞர்கள் எங்களை எல்லாம் வழிநடத்தி, 2024 தேர்தலிலும் மிகப்பெரிய வெற்றியை, நம்முடைய தலைவர் அவர்களுக்கு நீங்கள் அளிப்பீர்கள், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அளிப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு இருக்கின்றேன் என தெரிவித்தார்.