செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தற்போது பல்வேறு துறைகளில் கால் பதிக்க தொடங்கிவிட்டது. இதனைத் தொடர்ந்து மருத்துவத்துறையிலும் தன்னுடைய வரவை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அறிமுகம் செய்துள்ளது. அதாவது கூகுள் நிறுவனம் அமெரிக்காவின் மினியேஸ்டோவில் உள்ள மேயோ கிளினிக்கில் med palm-2என்ற செயற்கை நுண்ணறிவு சாட் போட்டை சோதனை முறையில் பயன்படுத்த தொடங்கியுள்ளது.

இந்த புதிய தொழில்நுட்பம் மருத்துவர்களுக்கு நிகரானது இல்லை என்றாலும் தரவுகள் மற்றும் மருத்துவர்களுக்கான முக்கிய தகவல்களை வழங்கி நோயாளிகளுக்கான சிகிச்சையை விரைவாக வழங்குவதற்கு மருத்துவர்களுக்கு உதவியாக இருக்கும். இதில் சேமிக்கப்படும் நோயாளிகளின் மருத்துவ தரவுகள் அனைத்தும் என்கிரிப்ட் செய்யப்படுவதால் அதனை சாட் போட் நிறுவனத்தால் பார்க்க முடியாது எனவும் கூகுள் நிறுவனம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஆனால் தற்போது இது சோதனை முறையில் மட்டுமே உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.